விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டை முத்தால்வாழியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் காத்தவராயன் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 9 நாட்கள் நடந்த விழாவில், முத்தால்வாழியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று தேர் திருவிழாவையொட்டி, காலை பூங்கரகம் வீதியுலாவும், மாலை 4:00 மணிக்கு தேர் திருவிழாவும் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.