கோடை காலத்தில் வரும் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு பால்காவடி, இளநீர்க்காவடி செலுத்துவது சிறப்பு. இளநீர், பால் அபிஷேகத்தால் குமரப்பெருமான் மனம் குளிர்ந்து பக்தர்கள் விரும்பும் வரம் அளிப்பார் என்பது ஐதீகம். இந்நாளில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தன்று காலை முதல் மதியம் வரை உற்சவர் சண்முகருக்கு பாலபிஷேகம் நடக்கும்.