ஆறுபடைவீடுகளில் கடற்கரைத்தலம் திருச்செந்தூர். இங்கு வாழும் பரதவர் குலமக்கள் செந்தூர் வேலவனைத் தங்களுக்கு மச்சான்’ (மாப்பிள்ளை) உறவாகக் கருதி வழிபடுகின்றனர். முருகனை மணந்த தெய்வானை பரதவ குலத்தில் பிறந்தவள் என்றும், அவள் கன்னியாகுமரி பகுதியை ஆண்ட மச்சேந்திரனின் மகள் என்றும் இவர்கள் கருதுகின்றனர். தெய்வானையின் அழகில் மயங்கி, மனதைப் பறி கொடுத்த முருகன் அவளை மிகவும் விரும்பி திருமணம் செய்ததாக இவர்கள் கூறுகிறார்கள். இந்த வரலாறு பரதவ குல பாண்டிய வம்ச சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. இதனடிப்படையில் கடலுக்குள் செல்லும் மீனவர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு நேராக படகை செலுத்தும் போது, அங்கிருந்தபடியே தேங்காய் உடைத்து வழிபடுவதை தங்களின் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.