சாயல்குடி: சாயல்குடி அருகே காணிக்கூர் பாதாளகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், நெய்,பஞ்சாமிர்தம், இளநீர், சந்தன அபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டினர். பின், சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு பத்து மணியளவில் அம்மனுக்கு தீபம் ஏற்றினர். பின், பெண்கள் விளக்கேற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அன்னதானம் நடந்தது. இதேபோல், பிள்ளையார்குளத்தில் பனையூர் அம்மன் கோயிலிலும் விளக்கு பூஜை நடந்தது.