எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, குழந்தை இயேசு ஆலயத்தில் நேற்று காலை அர்ச்சிப்பு விழா நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த, இலுப்புலி கிராமத்தில், கடந்த, 1932ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1939ம் ஆண்டில் இயேசு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இதில், 1961ம் ஆண்டு வரை லத்தீன் மொழியில் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், தமிழில் பூஜைகள் செய்யப்பட்டன. எனவே, 77ஆண்டுகள் பழமையான இத்திருத்தலத்தை இலுப்புலி கிராமத்தினர் புனரமைப்பு செய்துள்ளனர். தொடர்ந்து, நேற்று காலை நடந்த அர்ச்சிப்பு விழாவில் மறைமாவட்ட ஆயர் சிங்கராயர் பங்கேற்று ஆசி வழங்கினார்.