சூரியபகவானின் அதிக வலிமையும் சக்தியும் வாய்ந்த கிரணங்கள் இந்த பூமியின் மீது பொழிந்து நம்மை வலிமையாக்கும் உத்தராயண காலமிது. அந்நியர்கள் இங்கு வந்து வெயில் தாங்காமல் விடுமுறைக் காலமாக ஆனது. அப்பழக்கமே இன்றும் தொடர்ந்து, அதனால் சுற்றுலா, ஸ்தலயாத்திரை நதிநீராடல் எனும் ஆன்மிகச் செயல்களில் எல்லாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் புனிதநாட்களாகி விட்டன இக்காலம். நம் பாரத புண்யபூமியின் ஆன்மிக அற்புதங்களை யெல்லாம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதற்கு உகந்த காலமாகிவிட்டது. நம் பண்பாட்டின் மாட்சிமையை இளைய சமுதாயத்திடம் சிந்தாமல் சிதறாமல் ஒப்படைப்போம். அது நம் தலையாய கடமையும் கூட.