மரம், கோயில் போன்ற இடங்களே தங்குமிடம், பூமியே படுக்கை, மான் தோலே உடையாகக் கொண்டு எல்லா உடமைகளையும் ஆசைகளையும் விட்டு விட்டு வைராக்யத்துடன் விளங்கும் ஒருவன் எங்ஙனம் சந்தோஷமின்றி இருப்பான்? -ஸங்கராச்சார்ய நித்யானந்தர்
பரம் பொருளை பற்றிய ஞானம் அடையப் பெற்றவர் பித்தர், பேயர், பாலர், ஜடப்பொருள் போன்றும் இருப்பதைக் காணலாம். பேத புத்தி அவர்களை விட்டு அறவே அகன்று போய்விடுகிறது. மனிதன் தேடும் சுகம் தன்னிடத்தில் இருக்கிறது. அதை அவன் வேறெங்கோ தேடுகிறான். -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
கருத்து: உலகப் பொருட்களில் சுகம் இருக்கிறது என்று அதை அனுபவித்தால் அதைவிட துன்பம் பன்மடங்கு வருகிறது. சங்கராச்சார்யர் கூறுவது போல நாம் அனுபவிக்கும் பொருட்களில் சுகம் இருக்கிறது என துன்பம் அடைகிறோம். அனுபவிக்க துடிக்கும் ஆசையை துறத்தலே பூரணசுகம் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒருமுறை ஒரு திண்டில் சாய்ந்து கொண்டு இருங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார் ஆனால் அவர் ஜமுக்காளத்திலே அமர்ந்து விட்டார் அவர் அப்படியெல்லாம் வசதிதானாக வாய்த்தாலும் அதை ஏற்பதில்லை. இது நமக்கு புரியாதது போல் தோன்றும் ஆனால் இதுவே நிலையான உண்மை நமக்கு புரியாவிட்டாலும் இக்கருத்துக்களை தெரிந்து சிந்தித்தால் நலம் பயக்கும்.