பதிவு செய்த நாள்
24
மே
2016
11:05
செஞ்சி: பொன்பத்தி முனீஸ்வரன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி முனீஸ்வரன் ÷ காவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இன்று காலை 10.30 மணிக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, லஷ்மி, சுதர்சன ஹோமமும், 12 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலியும், இரவு 7 மணிக்கு யாக சாலை பூஜைகளும், 9 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சமர்ப்பணம் செய்ய உள்ளனர். நாளை (25ம் தேதி) காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விசேஷ ஹோமம், 8 மணிக்கு தம்பதி பூஜையும், 9 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடும், 10 மணிக்கு முனீஸ்வரன், காத்தவராயன், அம்மச்சார் அம்மன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். தொடர்ந்து 10.30 மணிக்கு மகா தீபாரா தனையும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்துள்ளனர்.