மீஞ்சூர்: ஆகாயத்தாமரை செடிகளாலும், குடியிருப்புகளின் கழிவு நீராலும், மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளம் சீரழிந்து கிடக்கிறது. மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவிலின் பின்பகுதியில் உள்ள கோவில் குளம் உரிய பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து கிடக்கிறது. குளத்தை சுற்றி உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் குளத்தில் நேரிடையாக விடப்படுவதுடன் குப்பை யும் கொட்டப்படுகிறது. இதனால் குளம் மாசடைந்து, அதன் புனித தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. குளம் முழுவதும் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து பொலிவிழந்து கிடக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தில் காலை நனைத்துவிட்டு செல்ல முடியாமல் போகிறது. குளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தும், பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேற்கண்ட குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.