சத்தியலோகத்தில் பிரம்மா நடத்திய யாகத்திற்கு தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரை அழைத்தார். தில்லையில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தால் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? என அவர்கள் கூறினர். அப்போது, நடராஜர் தோன்றி, யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. தினமும் காலை 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த நடராஜர் சிலையின் முன்புறமும், பின்புறமும் தீபாராதனை காட்டுவர்.