Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருத்தாசலத்தில் சீதா கல்யாண ... திருநாங்கூரில் 300 ஆண்டுகளுக்கு பின் பன்னிரு ரிஷபாரூட காட்சி! திருநாங்கூரில் 300 ஆண்டுகளுக்கு பின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
06:06

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா (11ம் தேதி)காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருநெல்வேலியில் நடுநாயகமாக விளங்கும் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனித்திருவிழா பிரசித்திபெற்றது. தமிழகத்தில் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துார் தேர்களைப்போல மிகப்பெரிய சுவாமி தேரினை கொண்ட சிவாலயமாகும்.

இங்கு ஆனித்திருவிழா இன்று (11ம் தேதி) காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமி சன்னதிக்கு முன்பாக உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிசேக, தீபாராதனைகள் நடந்தது.பஞ்சவாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆனித்திருவிழாவையொட்டி பத்து நாட்கள் திருநெல்வேலி மாநகரம் களைகட்டிவிடுகிறது. தினமும் காலையும் மாலையும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா மேற்கொள்கின்றனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணியவில் சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளுவர்.  தேரோட்டத்தையொட்டி நெல்லையப்பர் கோயில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் 10 நாட்களிலும் இரவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் ஆனித்தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகராட்சி திடலில் அரசுப்பொருட்காட்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar