பதிவு செய்த நாள்
16
ஜூன்
2016
11:06
மரக்காணம்: காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த முருக்÷ கரியில், புரோகிதர்கள் நலச் சங்கத்தின் சார்பில், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலை 8:30 மணிக்கு, நாகாத்தம்மன் கோவிலில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி உருவப்படம், பாதுகைகளை வைத்து வழிபாடு நடந்தது. மு ருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாச சுவாமிகள் கலந்து கொண்டு, கணபதி பூஜை, ஆவஹந்தி ஹோமங்கள், லட்சார்ச்சனை அஷ்டோத்ரம், ஸ்ரீசூக்த பாராய ணம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், மஹா தீபாராதனை செய்து வைத்தார். காலை 10:00 மணிக்கு, சுவாமிகளின் உருவப்படமும், பாதுகைகளும் வீதியுலா கொண்டு வரப்பட்டது. புரோகிதர்கள் நலசங்க தலைவர் சுந்தரம்அய்யர், பொருளாளர் கணேச அய்யர், இளைஞரணி தலைவர் நாகராஜ் அய்யர், நிர்வாகி மணிகண்ட சாஸ்திரி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.