புதுச்சேரி: கோவிந்த சாலை ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவில்
மகா கும்பாபிஷேக விழாவில், முதல்வர் நாராயணசாமி, சிவா எம்.எல்.ஏ.,
பங்கேற்றனர். உருளையன்பேட்டை, கோவிந்த சாலையில் 125 ஆண்டுகள் பழமையான
ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா 14ம்
தேதி கணபதி ஹோமத்துடன் தெடங்கியது. நேற்று காலை 5.30 மணிக்கு நான்காம் கால
யாகசாலை, தத்வார்ச்சனை, அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி,
கடம் புறப்பாடு நிகழ்ச்சி, 10.20 மணிக்கு அனைத்து விமானத்திற்கும்
கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள பரிவார
மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக
விழாவில், முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ., சிவா ஆகியோர் கலந்து
கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.