Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாட்டுக்கு தந்த பரிசு! கல்லில் செய்த வலஞ்சுழி விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாமா? கல்லில் செய்த வலஞ்சுழி விநாயகரை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தலைக்குள் கனத்தை ஏற்றாதே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2016
02:06

*நான் என்னும் தலைக்கனம் அழியும்போது தான் வாழ்க்கையில் எல்லா தொந்தரவுகளும் முடிவு பெறும். அந்த தலைக்கனம் அழியும் போது கடவுள் தோன்றி விடுவார்.
*உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக வாழ்வது கூடாது. சொல்லும், செயலுக்கும்
ஒற்றுமை காண்பதே நல்ல மனிதனுக்குரிய அடையாளம்.
*மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின் எல்லா உயிர்களுக்கும் அதிபதியான கடவுளைப் பற்றி அறியும் அறிவு கிடைத்து விடும்.
*கடவுளின் கருணைக் காற்று எப்போதும் நம் மீது வீசிக் கொண்டிருக்கிறது. மனமாகிய படகின் பாயை மட்டும் விரித்து விட்டால் வாழ்க்கை என்னும் கடலில் தைரியமாக முன்னேறிச் செல்லலாம்.
*தாயை நம்பும் குழந்தை போல அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கடவுளை
வழிபட்டால் அவரை நேரில் காணும் பாக்கியம் உண்டாகும்.
*கீழான ஆசைகள் மனதில் எழுவதை எண்ணி வருந்த வேண்டாம். கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் மனதிலுள்ள பலவீனமான எண்ணங்களில் இருந்து முற்றிலும் விடுபட முடியும்.
*படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகில் இருப்பது கூடாது. அதுபோல உலகில் வாசம் செய்தாலும், உலக ஆசைகள் மனதிற்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
*தனியாக இருக்கும் சமயத்திலும் யாருடைய மனம் பாவம் செய்ய அஞ்சுகிறதோ அவனே உண்மையான தர்மவான். அவன் கடவுளின் அன்பிற்கு உரியவனாகி விட்டான் என்று பொருள்.
*சிப்பிக்கு மதிப்பில்லாவிட்டாலும், அதுவே முத்தின் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. அதுபோல சடங்கு, சம்பிரதாயங்கள் மனிதன் கடவுளை அடைவதற்குத் துணை புரிகின்றன.
*வீட்டில் குடியிருப்பவன் விழிப்புடன் இருந்தால் திருடன் கொள்ளையடிக்க முடிவதில்லை. எண்ணத்தில் விழிப்பு இருந்தால் மனதைக் கொள்ளையடிக்க தீய சக்திகள் அஞ்சி நிற்கும்.
*கோபம் கூடவே கூடாது. கோபம் ஏற்படும் போது அறிவு, தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்ளும். இதனால் பகுத்தறியும் திறன் இல்லாமல் போய் விடும்.
*கடவுளின் திருநாமத்தை மனம் ஒன்றி ஜெபித்தாலே போதும். பாவம் செய்யும் எண்ணம் மறைந்து விடும். எண்ணம், சொல், செயல் மூன்றும் துõய்மை பெறும்.
*நினைத்தவுடன் ஒருநாளில் யாருக்கும் ஞானம் வந்து விடுவதில்லை. மரத்தில் பூத்த பூ, கனியாக மாறுவது போல காலம் என்னும் அரிய சக்தியே ஒருவனைப் பக்குவப்படுத்துகிறது.
*வெளியுலகத்திற்கு தெரியாது என்று எண்ணி யாருக்கும் துரோகம் நினைக்காதீர். மனசாட்சியை மதித்து நடந்தால் நிச்சயமாக வாழ்வில் வெற்றி உண்டாகும்.
*தாய்க்கும், தந்தைக்கும் மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். அவர்களைத் திருப்திபடுத்தாமல் தீர்த்த யாத்திரை செல்வதும், தான தர்மம் செய்வதும் பயனற்றதாகும்.

(மகான் ராமகிருஷ்ணர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar