பதிவு செய்த நாள்
21
ஜூன்
2016
12:06
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், நரசிம்ம பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று, தேர் திருவிழா நடைபெறுகிறது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 17ம் தேதி கருடசேவை உற்சவமும், 19ம் தேதி நாச்சியார் திருக்கோலம், அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தன. பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று, தேர்த் திருவிழா நடக்கிறது. இன்று அதிகாலை, 5:30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன், உற்சவர் தெள்ளியசிங்கர் தேரில் எழுந்தருள்கிறார். அதைத் தொடர்ந்து காலை, 7:00 தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.