திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் கருட சேவை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2016 11:06
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி விழா நடந்து வருகிறது. 6 நாள் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கருட சேவை நடந்தது. இதில் ரங்கநாதர், நின்ற நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். செங்கமலத்தயார் அன்னம் வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் கோபாலா கோவிந்தா என்ற கோஷத்தை உச்சரித்தப்படி சுவாமி தரிசனம் செய்தனர் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், ஆனைக்குட்டம் நாராயண சுவாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். முத்து பட்டர் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்பட்டன.