பதிவு செய்த நாள்
22
ஜூன்
2016
11:06
உடுமலை: குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், செவ்வாய் கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், அலங்காரமும் நடந்தது. உடுமலை அருகேயுள்ள, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஒவ்வொரு மாதமும், மூன்றாவது செவ்வாய் கிழமை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் நேற்று, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றுகூடி நாராயீணியம் பாராயணம் படித்தனர். இதையொட்டி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பவுர்ணமியையொட்டி, பால், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம் உட்பட, 18 வகையான அபிேஷகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் இடம்பெற்றன. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.