திருவாடானை பாகம்பிரியாள் கோயிலுக்கு ரூ.17.10 லட்சம் வருவாய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2016 02:06
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பொருட்கள் ரூ.17.10 லட்சத்துக்கு ஏலம் போனது.திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் பக்தர்கள் வெள்ளி, உப்பு, முட்டை, வேப்பிலை போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இவை ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடுவது வழக்கம். 2016 ஜூலை 1 முதல் 2017 ஜூன் 30 வரை காணிக்கை பொருட்கள் ஏலம் விடப்பட்டது. வெள்ளி பொருட்கள் ரூ.4.54 லட்சம், உப்பு ரூ.3.33 லட்சம், முட்டை ரூ.3.29 லட்சம், வேப்பிலை ரூ.2.26 லட்சம், நெய்விளக்கு ரூ.3.67 லட்சம் என மொத்தம் ரூ.17.10 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ஹரிகரன், ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, சரக கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் முன்னிலையில் ஏலம் நடந்தது.