பதிவு செய்த நாள்
28
ஜூன்
2016
12:06
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அடுத்த, கருமனூர் காகத்தலை அம்மன், கூத்தாண்டேஸ்வரர், கரியபெருமாள், கரிய விநாயகர், கரியகாளியம்மன் கோவில் திருவிழா இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. அமைச்சர் தங்கமணி துவக்கி வைக்கிறார். நாளையில் இருந்து, ஜூலை, 7ம் தேதி வரை, நாள்தோறும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடக்கிறது. ஜூலை, 12ம் தேதியன்று, பெரிய அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், முப்போடு அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை, 4 மணிக்கு மேல், சின்ன அம்மனுக்கு, பொங்கல் வைத்தலும், முப்போடு அழைத்தலும், வாண வேடிக்கைகளும் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.