முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் ஆறு கால யாக பூஜைகளுடன் நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம், வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. கிராம நிர்வாகிகள் கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியகருப்பன், சந்திரன், நடராஜன், சண்முகவேல், இளைஞரணி நிர்வாகிகள் போஸ், பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.