கோவை: கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில், சமஷ்டி உபநயனம்(பூணுால் அணிவித்தல்) நிகழ்ச்சி நடந்தது. ராம் நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் கணபதி தலைமை வகித்தார். காலை, ௬:௦௦ மணி முதல், சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, ௯:௩௦ முதல் ௧௦:௩௦ மணி வரை, ௨௧ குழந்தைகளுக்கு பூணுால் மாற்றப்பட்டது. சங்க செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்றனர்.