பதிவு செய்த நாள்
29
ஜூன்
2016
11:06
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் ரூ. ஒருகோடியே 69 லட்சத்து 83 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயிலில் 19 நாட்களில் நிறைந்த உண்டியல்கள் இரண்டாவது நாளாக திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் தங்கம் 1004கிராமும், வெள்ளி 12,920 கிராமும், வெளிநாட்டு கரன்சி-1013, ரொக்கமாக ரூ. 1 கோடியே 69 லட்சத்து 83 ஆயிரத்து 816 கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியிலான பெரியபாதம்,கீரிடம் வேல், தாலி, உருவம்,குத்துவிளக்கு,காவடி, சுவாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் பங்கேற்றனர்.