எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, சந்தன மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி அடுத்த, பொட்டிரெட்டிப்பட்டி இந்திராநகர் காலனியில் சந்தன மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. நாள்தோறும் மாரியம்மனுக்கு சந்தன அபிஷேகமும், ஆராதனைகளும் நடக்கின்றன. இன்று, அம்மனுக்கு பொங்கல் படையல் போடப்படுகிறது. நாளை, கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வரும், 1ம் தேதி, அம்மன் ஊஞ்சலில் பவனி வருதலும், 2ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.