சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோயிலில் மாவிளக்கு இட்டு வழிபாடு செய்வோருக்கு கோயிலிலேயே மாவிளக்கு தயார் செய்வதற்கு உரலும் உலக்கையும் உண்டு. உள்ளூரைச் சேர்ந்த பெண்களும் வந்து மாவு இடித்துத் தருகிறார்கள். மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் விரைந்து நடக்கும் என்பார்கள்.