பதிவு செய்த நாள்
21
ஜூலை
2016
12:07
உடுமலை: உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை நாளை நடக்கிறது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. உடுமலையிலுள்ள அம்மன் கோவில்களிலும் இப்பூஜைகள் நடக்கின்றன. உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் நாளை (22ம் தேதி) காலை, 7.30 மணிக்கு கோ பூஜையும், மகாலட்சுமி ேஹாமமும், மாலை, 5:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணமும் இடம்பெறுகின்றன. வரும் 29ம் தேதி, இரண்டாவது வெள்ளியன்று, மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், ஆகஸ்டு 2ம் தேதி ஆடிசெவ்வாயன்று காலை, 10:00 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும் நடைபெறுகிறது. ஆகஸ்டு 5ம் தேதி மூன்றாவது வெள்ளியன்று காலை, 10:30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ேஹாமமும், இரவு, 7:00 மணிக்கு திருஆடிப்பூரம் ஊஞ்சல் உற்சவமும், ஆகஸ்டு 12ம் தேதி நான்காவது வெள்ளியன்று, லட்சார்ச்சனையும் நடக்கின்றன. இதற்கான கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.