பதிவு செய்த நாள்
02
ஆக
2016
03:08
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, ஆக., 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, வரும், 10ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் மாவட்ட கருவூலகம், சார்நிலை கருவூலகங்கள், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, வரும், 20ம் தேதி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.