பதிவு செய்த நாள்
05
ஆக
2016
12:08
அம்மாபேட்டை: அம்மாபேட்டை, ராஜகணபதி கோவிலில், மூன்று நிரந்தர உண்டியல்கள் உள்ளன. அந்த உண்டியல்களில் இருக்கும் காணிக்கை பணத்தை எண்ண, அறநிலையத்துறை முடிவு செய்தது. அதையடுத்து, அந்த உண்டியல்கள், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின், ஜெய்ராம் கல்லூரி மாணவர்கள், 40 பேர் கலந்துகொண்டு உண்டியல் பணத்தை எண்ணினர். அதில், 7 லட்சத்து, 96 ஆயிரத்து, 252 ரூபாயும், தங்கம் மூன்று கிராம், வெள்ளி, 51 கிராம் மற்றும், 10 அமெரிக்க டாலர்களும் இருந்தன.