நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2016 12:08
ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேகம் இன்று நடக்கிறது. ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில், ஆடி 3ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பால்குட அபிஷேகம் இன்று நடக்கிறது. நேற்று காலை மகா கணபதி யாகம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் நடந்தது. மாலையில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, அம்மனுக்கு பால்குட அபிஷேகமும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.