குன்னுார்: குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில், சவுடேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. தொடர்ந்து குருபெயர்ச்சியையொட்டி, தட்சிணாமூர்த்திக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.