பதிவு செய்த நாள்
05
ஆக
2016
12:08
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள, பாப்பாயம்மாள், புள்ளாப்பம்மாள், வீரபத்திர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. பள்ளிபாளையம் அடுத்த, அம்மன்கோயில் வீதியில் அமைந்துள்ள, 24 மனை தெலுங்கு செட்டியார்களின் பாப்பாயம்மாள், புள்ளாப்பம்மாள், வீரபத்திர சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.