பதிவு செய்த நாள்
06
ஆக
2016
02:08
கரூர்: கரூர் அடுத்த, தளவாபாளையம் மாரியம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, வளையல் அலங்கார விழா நடந்தது.
வளையல் அலங்காரத்தையொட்டி, (5.8.16) வெள்ளிக்கிழமை முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், அம்மனுக்கு அபிஷேகம், இரவு, 10 மணிக்கு வளையல் அலங்காரம் துவங்கியது. (5.8.16) வெள்ளிக்கிழமை காலை வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீபாராதனை, சிறப்பு பூஜை, வாண வேடிக்கை, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தளவாபாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை, 8 மணி முதல் மாலை 5 மணி வரை, அம்மனுக்கு அலங்காரம் செய்த வளையல்கள், மஞ்சள்,குங்குமம் ஆகியவை பெண்களுக்கு வழங்கப்படுகிறது.