சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் பாலநாகம்மாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பல்வேறு புனித தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. கணபதி ஹோமத்துடன் துவங்கி, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. விசேஷ பூஜைகளுக்குப்பின், கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு திரவிய அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.