பதிவு செய்த நாள்
12
ஆக
2016
12:08
கடம்பத்துார்: கடம்பத்துார், திரவுபதி அம்மன் கோவிலில் நடந்து வரும் தீ மிதி திருவிழாவில், பக்தர்கள் நேற்று, சாட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த, 5ம் தேதி காலை, கொடியேற்றம் நடந்தது. அதன்பின், அன்று இரவு, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலாவும், 6ம் தேதி காலை, பீமன் வீதிஉலாவும், மாலை, பீமன் பக்காசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாண காட்சியும், கருட வாகனத்தில் கிருஷ்ணர் வீதிஉலாவும் நடந்தது. நேற்று காலை, சிவசக்தி வீதிஉலாவும், அதன்பின், காப்பு கட்டிய பக்தர்களுக்கு சாட்டையடித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா, வரும், 14ம் தேதி இரவு, 7:00 மணிக்கு நடைபெறும். மறுநாள் காலை, தருமராஜா பட்டாபிஷேகமும், 16ம் தேதி, விடையாத்தி அம்மன் வீதிஉலாவும் நடைபெறும்.