அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை பச்சையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நடந்தது.
அவலுார்பேட்டையில் மன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோவிலில் நடந்த ஆடி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷக, ஆராதனை நடந்தது. உலக அமைதி மற்றும் இயற்கை வள நலன் கருதி பக்தர்கள் பூ கரகம், அக்னி கரகம் எடுத்து கோவில் வளாகத்தை வலம் வந்தனர். இதில் திரளான கிராம மக்கள் கலந்துக் கொண்டனர்.