ராசிபுரம்: ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம் பூஜையில், துர்கை அம்மனுக்கு வலம்புரி சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. ராசிபுரம், கைலாசநாதர் சிவன் கோவிலில், துர்கா தேவிக்கு ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம் பூஜையை முன்னிட்டு, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. மாலை, 6 மணிக்கு துவங்கிய பூஜையில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றினர். பின், துர்கா தேவிக்கு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியை, 29வது ஆண்டு, துர்க்கை அம்மன் பக்தர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.