ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழ சுவாமி என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான் மாலையில் ராஜ அலங்காரத்திலும், காலையில் கோவணத்துடனும் காட்சி தருவார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. “இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நீ உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய்,” என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால், முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், அவ்வையார் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள். அந்த வார்த்தையே ஊருக்கும் சூட்டப்பட்டு விட்டது.