புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் நவராத்திரி உற்சவம் நாளை துவங்குகிறது. துச்சேரி அடுத்த பஞ்சவடீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் நாளை (28ம் தேதி) துவங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு கொலு ஆரம்பமாகிறது. இதில் ராமர், மகாலஷ்மி அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். 29ம் தேதி வேணுகோபாலன் அலங்காரம், 30ம் தேதி யோக நரசிம்மர், அடுத்த மாதம் 1ம் தேதி திருவேங்கடமுடையான், 2ம் தேதி ராமர்- ஆண்டாள், 3ம் தேதி வெண்ணைத்தாழி, 4ம் தேதி வைகுண்டநாதர், 5ம் தேதி சரஸ்வதி அலங்காரத்தில் ராமர் அருள் பாலிக்கிறார். தினமும் விசேஷ திருவாராதனம் நடக்கிறது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.