ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். தொடர்ந்து நான்குரத வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமி கோயிலில் 22 தீர்த்தங்களில் நீராடிய பின், சுவாமி,பர்வதவர்த்தனி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், ஊழியர்கள் செய்திருந்தனர்.