பதிவு செய்த நாள்
08
செப்
2016
12:09
ஈரோடு: ஈரோடு ரயில்வே காலனி, சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை, 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன், 108 சங்காபிஷேகமும், மதியம், 12 மணிக்கு அலங்கார, ஆராதனையும், 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இரவு, 7 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 8.30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தன. இன்று அதிகாலை, 5.30 மணி, மதியம், 12 மணி, மாலை, 6 மணிக்கு ஆரத்தி, இரவு, 7 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 8 மணிக்கு இரவு ஆரத்தி, 8.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடக்க உள்ளன.