பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு பாலமுருகன் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை ௯:௦௦ மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை ௫:௦௦ மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை ௮:௩௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விசேஷ சாந்தி, இரண்டாம் கால பூஜை, மாலை ௫:௩௦ மணிக்கு மூன்றாம் கால பூஜை, சிறப்பு உபச்சாரம், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று (௧௪ம் தேதி) காலை ௧௦:௦௦ மணிக்கு மேல் ௧௧:௦௦ மணிக்குள் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது.