சென்னிமலை மாரியம்மன் கோவிலில் ஆண்டு விழா நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2016 12:09
சென்னிமலை: சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கலச பூஜை, 108 சங்கு பூஜை, யாக பூஜை மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கோவில் வளாகத்தில் உள்ள முனியப்பசாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சொக்கநாதபாளையம், எல்லைக்குமாரபாளையம், ராமலிங்கபுரம், மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.