பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவில் மற்றும் முருகூர் பகுதியில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா, நேற்று நடந்தது. திருத்தணி முருகன் மலைக்கோவில், மேற்கு புறம் நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை விழா நடந்தது. காலையில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்தார். இரவு, 10:00 மணிக்கு, கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது. அதேபோல், திருத்தணி நகராட்சி, 21வது வார்டு, முருகூர் பகுதியில், ஜாத்திரை விழா நடந்தது. அங்குள்ள அம்மன் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, கங்கையம்மன், பூ கரகம் ஊர்வலம் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது.