விக்கிரவாண்டி : எண்ணாயிரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது. எண்ணாயிரம் கிராமத்தில் வரசித்தி செல்வ விநாயகர், பாலமுருகன், ரதி மன்மதன், நவகிரக கோவில்கள் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகம் விழா, இன்று காலை 9:05 மணிக்கு நடக்கிறது. மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமி தலைமை தாங்கி, கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகம் செய்து வைக்கிறார்.