திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில், திருவோண தீபம் ஏற்றப்பட்டது. திருவோண நட்சத்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து மாலை, ௬:௩௦ மணியளவில், கோவிலுக்கு எதிரிலுள்ள ௩௨ அடி உயர கற்கம்பத்தில் திருவோண தீபம் ஏற்றி, வழிபாடு செய்யப்பட்டது.