பரமக்குடி பெருமாள் கோயில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2016 04:09
பரமக்குடி: புரட்டாசி மாதம் முதல் சனிவாரத்தையொட்டி, பரமக்குடி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சிறப்பு தரிசனம் செய்தனர். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் பரமஸ்வாமி - திருப்பதி அலங்காரத்திலும், உற்சவர் சுந்தரராஜப் பெருமாள் ராமர் பட்டாபிஷேக திருக்கோலத்திலும், சவுந்தரவல்லித்தாயார் - சீதா பிராட்டியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் காலையில் ராமர், சீதை, லெட்சுமணன் மற்றும் அனுமன் சந்நதியில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தரைப்பாலம் அருகில் உள்ள மடத்தில் சிறப்பு பஜனை நடந்தது. சவுராஷ்ட்ர பள்ளி அருகில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் நகரில் உள்ள அனைத்து கோயில்களில் பொதுமக்கள் காலை முதல் சிறப்பு தரிசனம் செய்தனர்.