பதிவு செய்த நாள்
29
செப்
2016
12:09
ராமநாதபுரம், : மண்டபம் முகாம் சிங்காரத்தோப்பு காந்தாரி வழிவிடு மாரியம்மன், மண்டபம் சந்தனமாரி, ஐ.என்.பி., காலனி, ரயில்வே காலனி வீரசக்தி மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா செப்., 20ல் முத்து பரப்பி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவு வாலிபர்களின் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் நடந்தது. செப்., 27 மாலை அம்மன் கரகம் கடற்கரைகளில் இருந்து எடுத்து கோயிலை வந்தடைந்தது. நேற்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், பக்தர்கள் முடி இறக்கியும் நேர்த்தி கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊர்வலமாக சென்று கடற்கரைகளில் கரைக்கப்பட்டது. சந்தனமாரி அம்மன் கோயிலில் அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறப்பட்டது. காந்தாரி வழிவிடு மாரியம்மன் கோயில் விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜகுரு, மணி, உலகானந்தன், நாகராஜன், முருகானந்தம், நித்யானந்தம், குருநாதன் செய்தனர்.