நீர்காத்த அய்யனார் கோயில் வனப்பகுதியில் மழை வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2016 12:09
ராஜபாளையம், ராஜபாளையம் வேதாத்திரி மகரிஷியின் ஆன்மிக அறிவு திருக்கோயில் சார்பில் ராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோயில் வனப்பகுதியில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. கணேஷ்பிரபு தலைமை வகித்தார். வேதாத்திரிய முறைப்படி அருள்நிதி ராமச்சந்திரராஜா வனக்காவலர் முனியசாமி மற்றும் அடியார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறிவுத்திருக்கோயில் அறங்காவலர் தர்மலிங்கராஜா செய்தார்.