நவராத்திரி திருவிழாவின் முக்கியத்துவம் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சில கருத்துக்களைச் சொல்லியுள்ளார். 1916ம் ஆண்டு அக்டோபர் மாதம் கும்பகோணம் சங்கர மடத்தில் நவராத்திரி விழா நடப்பது பற்றி அறிந்ததும் அன்னை பராசக்தியைப் பற்றிய நினைவுகள் என் மனதில் நிழலாடின. உலகத்தார் அன்னை சக்தியிடம், நல்ல மழை பொழிய அருள வேண்டும் என வேண்டி ஒன்பது நாட்கள் சரத்(மாலை) காலத்தில் பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின் நோக்கம், உலகமே நன்மை பெற வேண்டும் என்பதற்காகும். நவராத்திரி காலத்தில் யோகமாயையானவள் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என மூன்று வடிவம் கொண்டு துஷ்டர்களை அழித்து, மனிதஜாதியை மகிழ்ச்சி பெற வைக்கிறாள். மனிதர்கள் படும் துன்பங்களை தீர்க்கும் பொருட்டாக தேவி அவதாரம் செய்யும் காலம் இது. அம்பாளைப் பற்றிக் கூற வேண்டுமானால், இவளே மாயை; இவளே சக்தி; செய்பவளும், செய்கையும், செய்கையின் பயனும் இவளே தான். தங்கையும், தாயும் இவளே. பரபிரம்மம் என்று வடமொழியில் கூறுவார்களே.... அவளும் இவளே. பாரத தேசம் உரிமை பெற்று மக்கள் சுபிட்சமாக வாழ இந்த நவராத்திரி நாட்களில் அம்பாளை வேண்டுவோம்.