பதிவு செய்த நாள்
03
அக்
2016
11:10
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில், புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று இரண்டாமாண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். காலை 11:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து திருக்கல்யாணமும், சுவாமி கோவில் உலாவும், திருத்தாலாட்டும் நடந்தது. பக்தர்களுக்கு தொடர் அன்னதானமும், தாம்பூலமும் வழங்கினர். பள்ளி, கல்லுாரி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பாகவதர்களின் கச்சேரி, கோலாட்டம், கும்மியாட்டம் ஆகியன நடந்தது.