கீழக்கரை, திருப்புல்லாணி ஆண்டவன் ஆசிரமத்தில் வேதாந்த தேசிக சுவாமிகளின் 749வது அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஹயக்ரீவப்பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. திருப்புல்லாணி பேஷ்கார் கண்ணன் அபய பிரதான சாரம் என்னும் ஆன்மிக நுாலை வெளியிட்டார். கோயில் மேலாளர் ரகுவீரதயாள் பெற்றுக்கொண்டார்.